கள்ளச்சாராயம் விற்ற வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

சின்னசேலம், ஜூன் 27: சின்னசேலம் வட்டம், கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (38). இவர் கடந்த மே மாதம் கடைசி தேதியில் தனது வீட்டின் அருகில் உள்ள ஓடையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் போது கையும் களவுமாக சின்னசேலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடமிருந்து 120 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் கைப்பற்றினர். இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் குற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் இவர் மீது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்திய மற்றும் விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. தொடர்ந்து இதுபோன்று மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவரது நடவடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி எஸ்.பி. மோகன்ராஜ் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்ததன் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் மேற்படி நபரை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி நேற்று ராமச்சந்திரன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

The post கள்ளச்சாராயம் விற்ற வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Related Stories: