நெல்லை அறிவியல் மையத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு ஓவிய போட்டி

நெல்லை : நெல்லை மாவட்ட அறிவியல் மையம் மற்றும் நெல்லை தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்துறை ஆகியவை சார்பில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் நேற்று நடந்தது. இதையொட்டி பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓவியம் மற்றும் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழ் மற்றும் ஆங்கில பிரிவில் பேச்சு போட்டிகள் நடந்தன.

இதில் 40 பள்ளிகளை சேர்ந்த 160 மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். முன்னதாக போட்டிகளை தொழிலாளர் நலத்துறை இணைஆணையர் சுமதி துவக்கி வைத்தார்.
அறிவியல் மைய அலுவலர் எம்குமார் தலைமை வகித்தார். தொழிலாளர் துறை உதவி ஆணையர் முருகபிரசன்னா முன்னிலை வகித்தார். அறிவியல் மைய கல்வி அலுவலர் மாரிலெனின் நன்றி கூறினார். தொடர்ந்து மாலை வரை நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

The post நெல்லை அறிவியல் மையத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு ஓவிய போட்டி appeared first on Dinakaran.

Related Stories: