புதூர்பாண்டியாபுரம் டோல்கேட் பகுதியில் கார் மீது நிலக்கரி ஏற்றி வந்த லாரி மோதி கவிழ்ந்தது

ஓட்டப்பிடாரம்:திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்தவர் தவமணி. இவர் தனது நண்பர்களுடன் நேற்று காரில் தூத்துக்குடி பனிமய மாதா தேவலாயத்திற்கு சென்றுவிட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தார். தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் பகுதியில் நேற்று மாலை 3.30 மணியளவில் கார் சென்ற போது பின்னால் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக மோதி டோல்கேட் முன்பாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்த பல டன்கள் நிலக்கரி சாலையில் கொட்டியது. விபத்தில் காரில் இருந்தவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். லாரியை ஒட்டி வந்த டிரைவர் குரங்கணியைச் சேர்ந்த வீரபாண்டியன் மகன் மணிகண்டன்(34) மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை பிடித்த சிலர் அவரை தாக்கியதாகவும் தெரிகிறது. தகவலறிந்த புதியம்புத்தூர் போலீசார் அங்கு வந்து காயமடைந்த லாரி டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் டோல்கேட்டில் பதிவாகியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரிக்கின்றனர். சாலையில் கொட்டிய நிலக்கரியை அள்ளும் பணியும் நடந்து வருகிறது. விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

The post புதூர்பாண்டியாபுரம் டோல்கேட் பகுதியில் கார் மீது நிலக்கரி ஏற்றி வந்த லாரி மோதி கவிழ்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: