தமிழ்நாட்டு பாரம்பரிய மீனவர்களின் உரிமையை நிலை நாட்டவும், பாதுகாப்பை உறுதிபடுத்தவும் ஒன்றிய அரசு தலையிட வேண்டுமென தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் வலியுறுத்தப்படுகிறது. ஆனால், ஒன்றிய அரசு தரப்பில் உறுதியான நடவடிக்கை எதுவும் இல்லை. தற்போது 22 இந்திய மீனவர்களை இலங்கை படையினர் பிடித்துச் சென்றுள்ளனர். இது ஒப்பந்தத்தை மீறிய செயலாகும். எனவே, 22 மீனவர்களை விடுதலை செய்யவும், இந்தியா – இலங்கை இடையிலான கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து, கச்சத்தீவை மீட்கவும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா, நீதிபதி ஆர்.சுப்ரமணியன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்யும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு உள்ளதா’’ என மனுதாரர் வக்கீலிடம் கேட்டனர். இதற்கு அவர், ‘‘இல்லை’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘அதிகாரம் இல்லாத விவகாரத்தில் எப்படி தலையிட முடியும்’’ என்றனர்.இதையடுத்து நீதிபதிகள், மனு மீதான விசாரணையை ஜூலை 7க்கு தள்ளி வைத்தனர்.
The post இலங்கை கடற்படையால் 111 தமிழக மீனவர்கள் கொலை கச்சத்தீவை மீட்கக்கோரி வழக்கு: விசாரணை தள்ளி வைப்பு appeared first on Dinakaran.