47வது வார்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த செல்வராஜ் எம்.எல்.ஏ

 

திருப்பூர்,ஜூன்23:திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.க.செல்வராஜ் திருப்பூர் மாநகராட்சி 47வது வார்டு பகுதியில் ‘இல்லம் தேடி எம்.எல்.ஏ. என்ற திட்டத்தின் கீழ் நல்லூர்,விஜயாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று தெரு,தெருவாக சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்.குப்பைகளை அகற்றிக்கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தங்கள் பகுதி பிரச்னைகள் குறித்து தெரிவித்தனர்.அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. உத்தரவிட்டார்.

கழிவுநீர் வடிகால் வசதியில்லாத பகுதிகளில் விரைவில் பணிகளை மேற்கொள்ளவும்,குப்பை குவியாமல் தினமும் அள்ளுவதற்கு அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினார்.முன்னதாக அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் எம்.எல்.ஏ., செல்வராஜிக்கு சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்த ஆய்வின் போது திமுக திருப்பூர் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன்,பகுதி செயலாளர்கள் மேங்கோ பழனிசாமி,உசேன், வடக்கு மாநகர அவைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்டக் கழக செயலாளர் வெங்கட்ராஜா,மாநகராட்சி கவுன்சிலர் ஜெயசுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post 47வது வார்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த செல்வராஜ் எம்.எல்.ஏ appeared first on Dinakaran.

Related Stories: