பள்ளிப்பட்டு பேரூராட்சி கூட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு அனுமதி

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு பேரூராட்சித் தலைவர் மணிமேகலை தலைமையில் மன்றக்கூட்டம் நேற்று நடைபெற்றது. பேரூராட்சி துணைத் தலைவர் ஜோதிகுமார் இதில் முன்னிலை வகித்தார். வரித் தண்டலர் அனைவரையும் ராஜசேகர் வரவேற்றார். இக்கூட்டத்தில் 12 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும் வரவு செலவு கணக்கு தொடர்பான அறிக்கை வாசிக்கப்பட்டது. பேரூராட்சியில் தூய்மை சுகாதாரம், தெரு விளக்குகள் குறித்து உறுப்பினர்கள் பேசினர்.

குறிப்பாக பஜார் வீதி, ஈச்சம்பாடி பகுதிகளில் புதியதாக மின் கம்பங்கள் அமைக்கவும், அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி அருகில் கழிவுநீர் கால்வாய் பழுதடைந்துள்ள நிலையில் அதனை சீரமைக்க மன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேரூர் கவுன்சிலர்கள் செந்தில் குமார், கபிலா சிரஞ்சி, விஜயலு, சுவப்பனா முரளி, டென்னீஸ் பிரேம், ஜெயலட்சுமி, குணசேகர், ஆஷ்மா அபிபுல்லா, ராணி, உமா, புவனா, பானு, செல்வராணி ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

The post பள்ளிப்பட்டு பேரூராட்சி கூட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: