மணிப்பூர் கலவரத்துக்கு தீர்வு காணாமல் வெளிநாடு செல்லும் பிரதமர்: உத்தவ் தாக்கரே விமர்சனம்

மும்பை: மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே பேசியதாவது: வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு செல்வதற்குப் பதிலாக, பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார். இங்குள்ள பிரச்னைக்கு தீர்வு காணாமல் வெளிநாடு செல்வது ஏன்? சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை அதிகாரிகளை மணிப்பூருக்கு அனுப்பி வைக்கலாமே. உக்ரைன் போரை பிரதமர் நிறுத்தியதாக கூறுகின்றனர். எனவே மணிப்பூரில் நடக்கும் வன்முறையை பிரதமர் மோடி நிறுத்தி அமைதியை நிலைநாட்ட வேண்டும். அதன்பிறகு, உக்ரைனில்போரை நிறுத்தியது தொடர்பான கூற்றுக்களை நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு பேசினார்.

The post மணிப்பூர் கலவரத்துக்கு தீர்வு காணாமல் வெளிநாடு செல்லும் பிரதமர்: உத்தவ் தாக்கரே விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: