தமிழ்நாட்டில் ஜூன் 29ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும்: அரசு தலைமை காஜி சலாஹுதீன் முகமது அயூப் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் 29ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாஹுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் ஈகை திரு நாளான பக்ரீத் பண்டிகை இந்த ஆண்டில் ஜூன் 29ம் தேதி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் துக்ஹஜ் மாத முதல் பிறை தென்பட தொடங்கியுள்ளது. அன்றைய தினத்தில் இஸ்லாமியர்கள் அனைவரும் குர்பானி கொடுத்து தொழுது, ஒற்றுமையுடன் இணைந்து வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பது வழக்கம்.

இந்நிலையில், ஜூன் 29ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாஹுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். இதுகுறித்து முப்தி காஜி டாக்டர் சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

“ஹஜ்ரி 1444 துல் கஃதா மாதம் 29ம் தேதி திங்கட்கிழமை ஆங்கில மாதம் 19-06-2023 தேதி அன்று மாலை துல் ஹஜ் மாத பிறை நாகூர்யில் காணப்பட்டது. ஆகையால் செவ்வாய்கிழமை ஆங்கில மாதம் 20-06-2023 தேதி அன்று துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் ஈதுல் அத்ஹா(பக்ரீத்) வியாழக்கிழமை 29-06-2023 தேதி கொண்டாடப்படும்” என தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் ஜூன் 29ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும்: அரசு தலைமை காஜி சலாஹுதீன் முகமது அயூப் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: