கலவர பூமியாக மாறி இருக்கும் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டாமல் பிரதமர் மோடி அமெரிக்கா செல்வதற்கு உத்தவ் தாக்கரே கண்டனம்!!

மும்பை: கலவர பூமியாக மாறி இருக்கும் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டாமல் பிரதமர் மோடி அமெரிக்கா செல்வதற்கு மராட்டிய முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் இட ஒதுக்கீடு தொடர்பாக மெய்தி மற்றும் குக்கி இன சமூகத்தினரிடேயே ஒரு மாதத்திற்கும் மேலாக வன்முறை நீடிக்கிறது. அங்கு அமைதியை நிலைநாட்டும் ஒன்றிய அரசின் முயற்சியும் தோல்வியின் முடிந்தது. இந்த பிரச்சனையில் மோடி தலையிட வேண்டும் என்று மணிப்பூரில் உள்ள அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதே நேரத்தில் கலவரம் பற்றி வாய் திறக்காமல் இருக்கும் பிரதமர் மோடி நாளை 6 நாள் பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

இந்த நிலையில் பற்றி எரியும் மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் மோடி அமெரிக்கா செல்வது ஏன் என்று மராட்டிய முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். மராட்டியத்தில் தனது கட்சி சார்பில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய உத்தவ் தாக்கரே, வன்முறையின் பிடியில் இருக்கும் மணிப்பூர் மாநிலத்தை பிரதமர் மோடி ஏட்டிக் கூட பார்க்கவில்லை என்று விமர்சித்துள்ளார். அங்கு அமைதியை நிலைநாட்டி வன்முறையை சுட்டு வீழ்த்தினால் பிரதமர் மோடி ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வந்ததாக கூறப்படும் கூற்றினையும் தாங்களும் நம்புவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post கலவர பூமியாக மாறி இருக்கும் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டாமல் பிரதமர் மோடி அமெரிக்கா செல்வதற்கு உத்தவ் தாக்கரே கண்டனம்!! appeared first on Dinakaran.

Related Stories: