சென்னையை அடுத்த முடிச்சூரில் கனமழையால் கிணற்றின் பக்கவாட்டு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது..!!

செங்கல்பட்டு: கனமழையால் சென்னையை அடுத்த முடிச்சூரில் விவசாய கிணற்றின் சுற்றுச்சுவர் திடீரென்று இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மற்றுமின்றி புறநகர் பகுதிகளிலும் காலை முதலே கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், முடிச்சூர், பெருங்களத்தூர், மண்ணிவாக்கம், படைப்பை உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை நீடித்தது. இதனால் ஜிஎஸ்டி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்தது. மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குளுமையான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் மழையால் முடிச்சூர் ரங்கா நகரில் உள்ள விவசாய கிணறு ஒன்றின் சுற்றுச்சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. கிணற்றை சுற்றி மழைநீர் தேங்கியதால் கிணற்றின் சுற்றுச்சுவர் பலமிழந்து இடிந்து விழுந்தது. தொடர்ந்து மழை நீடித்ததால் சில நிமிடங்களிலேயே கிணறு முழுவதுமாக நிரம்பியது. கிணற்றில் இருந்து வெளியேறும் தண்ணீர் கடல் அலையை போல எழும்பி வருகிறது. இந்த கிணறு சாலைக்கு அருகாமையிலேயே இருப்பதால் அப்பகுதியில் தேங்கிய மழைநீர் அனைத்தும் கிணற்றுக்குள் கொட்டி வருகிறது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

The post சென்னையை அடுத்த முடிச்சூரில் கனமழையால் கிணற்றின் பக்கவாட்டு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது..!! appeared first on Dinakaran.

Related Stories: