பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சேலம் வந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு விமான நிலையத்தில் திரண்ட தொண்டர்கள்

 

சேலம், ஜூன் 11: கலைஞர் சிலை திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நேற்று மாலை சேலம் வந்த முதல்வருக்கு, காமலாபுரம் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சேலம் அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலை மற்றும் ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட்டை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைக்கிறார். தொடர்ந்து கருப்பூரில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க, சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சேலம் வந்தடைந்தார். அப்போது போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, காமலாபுரம் விமான நிலையத்தில் திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் முதல்வரை வரவேற்றனர். மேலும், மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர், மேயர் ராமச்சந்திரன் ஆகியோரும் முதல்வரை வரவேற்றனர். தொடர்ந்து, சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலைய வளாகத்தில் திரண்டிருந்த ஏராளமான தொண்டர்கள், முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதேபோல் போக்குவரத்து ெதாமுச சார்பில், காமலாபுரம் விமான நிலையம் முதல் ஓமலூர் மெயின்ரோட்டில் நூற்றுக்கணக்கானோர் வழிநெடுகிலும் நின்று, முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பு நிகழ்ச்சியில் எம்பிக்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், பொன்.கவுதம சிகாமணி, தர்மபுரி மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்ரமணி, பழனியப்பன், தேர்தல் பணிக்குழு செயலாளர் தாமரைக்கண்ணன், துணை மேயர் சாரதாதேவி, மாநில தொழிலாளர் அணி துணை தலைவரும், ஜலகண்டாபுரம் பேரூராட்சி தலைவருமான காசி, மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணை செயலாளர் செல்லதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சேலம் வந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு விமான நிலையத்தில் திரண்ட தொண்டர்கள் appeared first on Dinakaran.

Related Stories: