எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் 2023ம் ஆண்டிற்கான தமிழ்ச்சுடர் விருதுகள்: நெல்லை முபாரக் அறிவிப்பு

சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக சமூகத்தில் பல்வேறு தளங்களில் மக்களுக்கு சேவையாற்றக்கூடிய சிறந்த ஆளுமைகளை கௌரவிக்கும் விதத்திலும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் தமிழ்ச்சுடர் விருதுகள் வழங்கி வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான (2023) விருதுகளை பெறும் ஆளுமைகளை தேர்ந்தெடுக்க விருது கமிட்டி குழு அமைக்கப்பட்டது. பல்வேறு பரிந்துரைகளின் அடிப்படையில், அந்த குழு பின்வருபவர்களை விருதுக்காக தேர்வு செய்துள்ளது.

திமுக செய்தி தொடர்புக்குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் விருது, இயக்குநர் வெற்றிமாறனுக்கு தந்தை பெரியார் விருது, தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவனுக்கு டாக்டர் அம்பேத்கர் விருது, பேராசிரியர் ஜவஹர் நேசனுக்கு பெருந்தலைவர் காமராசர் விருது, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனுக்கு பழனிபாபா விருது, சிங்கப்பூரை சேர்ந்த மூத்த எழுத்தாளர் சாலிக்கு கவிக்கோ விருது, மேட்டுப்பாளையம் காட்டுயிர் ஆர்வலர் முகம்மது அலிக்கு ஐயா நம்மாழ்வார் விருது, திருவொற்றியூரை சேர்ந்த சமூக சேவகர் அலி பாஷாவுக்கு அன்னை தெரசா விருது, வேலூரை சேர்ந்த மூத்த களப்போராளி ஷேக் மீரானுக்கு சயீத் சாஹிப் விருது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தமிழ்ச்சுடர் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த ஆளுமைகளுக்கு எனது வாழ்த்துகள். இவர்களுக்கு வரும் 24ம் தேதி, சென்னை, பிராட்வே ஹயாத் மஹாலில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

The post எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் 2023ம் ஆண்டிற்கான தமிழ்ச்சுடர் விருதுகள்: நெல்லை முபாரக் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: