வயலில் இறங்கி நெல் தூவிய நாகை கலெக்டர்

கீழ்வேளூர்: நாகப்பட்டினம் அருகே குறுவை நேரடி நெல் விதைப்பு பணியை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்து விவசாயிகளுக்கு ஊக்கமளித்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்தாண்டு 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட உள்ளது. இதில் 37,500 ஏக்கர் குறுவை நேரடி நெல் விதைப்பு செய்யப்படுகிறது. இந்நிலையில் கீழ்வேளூரை அடுத்த ஆணைமங்கலம் ஊராட்சி மஞ்சவாடி பகுதியில் நேற்று கோடை உழவு செய்யப்பட்ட நெல் வயலில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் இறங்கி குறுவை நேரடி நெல் விதகைளை தூவி தொடங்கி வைத்தார்.

பின்னர் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கூறுகையில், ‘காவிரி டெல்டா பாசன பகுதிக்கு பாசனத்திற்காக இந்த ஆண்டு 12ம்தேதி மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் தூர்வாரும் பணி 90 சதவீதத்திற்கு மேல் முடிவுற்றுள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் இந்த வருடம் சிறப்பான வருடமாக இருக்கும்’ என்றார்.

The post வயலில் இறங்கி நெல் தூவிய நாகை கலெக்டர் appeared first on Dinakaran.

Related Stories: