புதுப்பொலிவூட்டப்பட்ட திமுக இணைய தளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: புதுப்பொலிவூட்டப்பட்ட திமுக இணைய தளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான WWW.DMK.IN, வண்ணமிகு வடிவில், புதுப்பொலிவுடன் புதிய பரிணாமத்துடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதாவது WWW.DMK.IN என்ற திமுக இணையதளத்தில் அண்மை நிகழ்வுகள், திராவிட மாடல், சாதனைகள், கொள்கைகள், வரலாறு, மக்கள் பிரதிநிதிகள் என ஏராளமான விவரங்கள் இடம் பெற்றுள்ளன. அதேபோல் திமுக வெளியீடுகள், தேர்தல் அறிக்கைகள், கருணாநிதி வரலாறு என இன்னும் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

அரசு சார்ந்த அறிவிப்புகள், புகைப்படங்கள், அறிக்கைகளும் திமுக இனையதளப் பக்கத்தில் இடம் பெறும் வகையில் புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. உழைப்பு, உழைப்பு, உழைப்பு அதுவே நம் அன்பு தளபதி. என்றும் வாழ்கிறார்! கலைஞர் இன்றும் ஆள்கிறார்! என்ற வாசகமும் இந்த இணையதளப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. புதுப்பொலிவூட்டப்பட்ட திமுக இணைய தளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று காலை சென்னை, ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தொடங்கி வைத்தார்.

இணையதளத்தை துவக்கி வைத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இயக்க வரலாறு, அண்மை நிகழ்வுகள், நமது சாதனைகள் என இன்னும் பல தகவற்புதையல்கள் நிறைந்த, புதுப்பொலிவூட்டப்பட்ட திமுக வலைத்தளத்தை கலைஞர் 100 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தொடங்கி வைத்தேன். கையெழுத்துப் பிரதி இதழ்கள் முதல் கணினி வரை கழகம் கடந்து வந்த நீண்ட பயணத்தை தலைமுறைகள் தாண்டியும் அறியச் செய்வோம்!”.இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post புதுப்பொலிவூட்டப்பட்ட திமுக இணைய தளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: