மணிப்பூரில் ஒரு மாதத்திற்கு மேலாக நீடிக்கும் வன்முறை: அதிகாலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மூதாட்டி உட்பட 3 பேர் உயிரிழப்பு

மணிப்பூர்: மணிப்பூரில் நடந்த இன மோதல்களில் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இந மோதல்கள் தொடரான வழக்குகளை விசாரிக்க சிபிஐ சிறப்பு குழுக்களை நியமித்திருக்கிறது. மணிப்பூரில் மெய்திக்குக்கி இன மக்களுக்கிடையே ஆன மோதல்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த மோதல்களில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

35 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி இருக்கின்றனர். மோதல்களை தடுக்கும் வகையில் இணைய சேவைகள் துண்டிக்கபட்டிருப்பதுடன் பல இடங்களில் 144 தடை உத்தரவு நீடித்து வருகிறது. ஒன்றிய உள்துறை அமைச்சர் மணிப்பூரில் ஆய்வு செய்திருப்பதுடன், வன்முறை தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரிக்கும் என அறிவித்தார்.

இந்நிலையில் குக்கி இன மக்கள் வசிக்கும் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 67 வயது மூதாட்டி உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். மெய்தி குழுவை சேர்ந்தவர்கள் ராணுவம் மற்றும் போலீசார் சீருடையில் வந்து அதிகாலையில் இந்த தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது. இதனிடையே மணிப்பூர் வன்முறை சம்பவங்களை விசாரிக்க 10 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை சிபிஐ அமைத்துள்ளது.

முதற்கட்டமாக 6 வழக்குகளை பதிவு செய்திருப்பதாக சிறப்பு குழு அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இதனிடையே கலவரம் பாதித்த மணிப்பூரில் நிலைமையை பற்றி அறிந்து கொள்ள அம்மாநில முதல்வர் என்.பைரேன் சிங்கை அசாம் முதலமைச்சர் ஹிமந்தா புஷ்வா நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போதைய நிலை நிவாரண பணிகள் உள்ளிட்டவற்றை ஹிமந்தா கேட்டறிந்ததாக தெரிகிறது.

The post மணிப்பூரில் ஒரு மாதத்திற்கு மேலாக நீடிக்கும் வன்முறை: அதிகாலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மூதாட்டி உட்பட 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: