திருச்சி: உறுதி செய்யும் தேதிகளில் பட்டமளிப்பு விழா நடத்த தயாராக உள்ளோம் என திருச்சி பாரதிதாசன் பல்கலை. தரப்பு தெரிவித்துள்ளது. 2023ம் கல்வியாண்டில் பட்டம் முடித்த மாணாக்கருக்கு நவம்பர் அல்லது டிசம்பரில் பட்டமளிப்பு நடைபெறும். 2021 மற்றும் 2022ல் படித்துமுடித்த மாணவர்களுக்கு ஜூலை அல்லது ஆகஸ்டில் பட்டமளிப்பு நடைபெறும் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 2 லட்சம் மாணவர்கள் பட்டம் பெறாமல் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
The post உறுதி செய்யும் தேதிகளில் பட்டமளிப்பு விழா நடத்த தயாராக உள்ளோம்: திருச்சி பாரதிதாசன் பல்கலை. தரப்பு தகவல் appeared first on Dinakaran.