கோவை தடாகத்தில் அனுமதியின்றி தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் மூழ்கி சிறுவன் பலி..!!

கோவை: கோவை தடாகத்தில் அனுமதியின்றி தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தான். தடாகம் பகுதியில் செங்கல் தயாரிக்க பள்ளம் தோண்டப்பட்டு அப்படியே விடப்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். நாயக்கன்பாளையம் சிவக்குமாருக்கு சொந்தமான நிலத்தில் தோண்டப்பட்ட குழியில் மழை நீர் தேங்கியிருந்தது. சாந்திமேட்டைச் சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஹரிஷ்(14) குழியில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி பலியானார்.

The post கோவை தடாகத்தில் அனுமதியின்றி தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் மூழ்கி சிறுவன் பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: