தமிழகத்திற்கு அதிக மழை பொழிவை கொடுக்கும் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை

சென்னை: தமிழகத்திற்கு அதிக மழை பொழிவை கொடுக்கும் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்வது மற்றும் எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடைபெற்றது. தமிழகத்திற்கு ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழையில் தான் அதிக மழை பொழிவானது காணப்படுகிறது. அதுவும் இந்த மழையானது முதலில் கேரளாவில் இருந்து ஆரம்பமாகி தமிழகம், ஆந்திரா, தெலங்கானா என அடுத்தடுத்து பிற மாநிலங்களிலும் பரவலாக காணப்படும். வழக்கமாக, கேரளாவில் தென்மேற்கு பருவமழை என்பது மே மாதம் இறுதியில் அல்லது ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்கும். அதன்படி, இந்தாண்டு தென்மேற்கு பருவமழையானது கேரளாவில் ஜூன் 1 அல்லது 4ம் தேதி துவங்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், ஜூன் 4ம் தேதி துவங்கவில்லை.

இந்த நிலையில் கேரளாவில் நேற்று (8.ம் தேதி) முதல் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கியுள்ள நிலையில், இதன்மூலம் தமிழகத்திற்கும் நல்ல மழை பொழிவு கிடைக்கும். இந்நிலையில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்வது மற்றும் எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து சென்னை, தலைமை செயலகத்தில் இன்று காலை ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை உயர் அதிகாரிகள், காவல்துறை மற்றும் தீயணைப்பு அதிகாரிகளும் பங்கேற்றனர்.

The post தமிழகத்திற்கு அதிக மழை பொழிவை கொடுக்கும் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: