பிளஸ் 2 துணைத் தேர்வு டிடிஎட் தேர்வுக்கு ஹால்டிக்கெட் வினியோகம்

சென்னை: பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவ மாணவியருக்கான ஹால்டிக்கெட்டுகள் 14ம் தேதி முதல் தேர்வுத்துறை இணைய தளத்தில் வெளியிடப்படும் என்றும் தொடக்க கல்வி பட்டயத் தேர்வு என்னும் டிடிஎட் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் 23ம் தேதி முதல் வினியோகம் செய்யப்படும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வில் ஓரிரு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவ மாணவியருக்காக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள்(தக்கல் உட்பட) தங்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை 14ம் தேதி மதியத்துக்கு பிறகு www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தனித் தேர்வர்கள் மேற்கண்ட இணையதளத்தில் சென்று, தங்களின் விண்ணப்ப எண் அல்லது நிரந்தர பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரங்களை தனித் தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும்.
ஆசிரியர் பயிற்சி தேர்வு:ஆசிரியர் பயிற்சித் தேர்வுக்கு(தொடக்க கல்வி பட்டயத் தேர்வு) விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்களுக்கு ஜூன், ஜூலை மாதங்களில் தேர்வு நடக்க இருக்கிறது. முதலாம் ஆண்டுக்கான தேர்வு 23ம் தேதி முதல் ஜூலை 12ம் தேதி வரையும், இரண்டாம் ஆண்டுக்கான தேர்வு ஜூன் 22ம் தேதி முதல் ஜூலை 11ம் தேதி வரையும் நடக்கும். இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளம் வழியாக 12ம் தேதி மதியத்துக்கு பிறகு தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி விவரங்களை பதிவு செய்து ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

The post பிளஸ் 2 துணைத் தேர்வு டிடிஎட் தேர்வுக்கு ஹால்டிக்கெட் வினியோகம் appeared first on Dinakaran.

Related Stories: