தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறை தற்போது சிறப்பாக உள்ளது: கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி !

திருப்பூர்: தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறை தற்போது சிறப்பாக உள்ளது என கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் உள்ள தமிழகத்தின் இரண்டாவது பயிற்சி மையத்தின் புதிய வலை பயிற்சி அரங்கை இந்திய கிரிக்கெட் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தமிழகத்தின் முன்பு இல்லாத அளவிற்கு தற்போது வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. 20 ஓவர் போட்டி, டெஸ்ட் கிரிக்கெட் என பிரித்துப் பார்க்க முடியாது; ஒவ்வொன்றும் தனித்துவமானது. எப்பொழுதும் டெஸ்ட் போட்டியில் தான் திறமையை நிரூபிக்க முடியும்.

டிஎன்பிஎல் மூலமாக 13 பேர் தமிழ்நாட்டில் இருந்து ஐபிஎல் போட்டியில் இடம்பெற்றுள்ளனர். நான் கிரிக்கெட்டில் வந்த காலத்தில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை தற்பொழுது வாய்ப்புகள் அதிக அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை விளையாட்டு வீரர்கள் பயன்படுத்திக்கொண்டு, தன்னைப் போன்ற கிராமப்புற பகுதிகளில் இருப்பவர்கள் வெளியே வர வேண்டும். கிராமப்புற பகுதிகளில் இருப்பவர்கள் வெளியே வர வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து விளையாட்டு வீரர்கள் தேர்வாக வேண்டும் என்பது எனது விருப்பம். என்னை மாதிரி நிறைய பேர் உருவாகனும்னு விரும்பறேன் இவ்வாறு கூறினார்.

The post தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறை தற்போது சிறப்பாக உள்ளது: கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி ! appeared first on Dinakaran.

Related Stories: