ஆண்டிபட்டி : கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று முடிவு செய்யப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். தேனிமாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடுவதற்கு மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குமணன் உத்தரவிட்டார்.
ஆண்டிபட்டி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில் வைகை அணையில் இருந்து வருசநாடு வரை மாநில நெடுஞ்சாலையில் மரக்கன்று நடும் பணியை எம்எல்ஏ மகாராஜன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். தேக்கம்பட்டி அருகே உள்ள பொன்னம்மாள்பட்டி சாலை ஓரங்களில் மரங்கள் நடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வேம்பு, புளியம், புங்கை, நாவல் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடும் வேலை நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் குமணன், உதவிக் கோட்டப் பொறியாளர் திருக்குமரன், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், பேரூர் செயலாளர் சரவணன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
* உத்தமபாளையம் உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.கம்பம் கூடலூர் சாலையில் கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை தாங்கி மரக்கன்று நடும் விழாவை தொடங்கி வைத்தார்.
இதில் உதவி கோட்ட பொறியாளர் தங்கராஜ், உதவி பொறியாளர் வைரக்குமார், சாலை ஆய்வாளர் முருகேசன் மற்றும் முன்னாள் வடக்கு நகர செயலாளர் வக்கீல் துரை. நெப்போலியன் ,திமுக தேனி தெற்கு மாவட்ட பிரதிநிதி சொக்கராஜார், வார்டு கவுன்சிலர் பார்த்திபன் மற்றும் திமுகவினர் ,நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
* தேனி அருகே வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட முத்துத்தேவன்பட்டியில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தேனி யூனியன் சேர்மன் சக்கரவர்த்தி மரக்கன்றுகளை நட்டார்.
முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி மாநில நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டம் சார்பில், சுமார் 2000 மரக்கன்றுகள் நடும் விழா தேனி அருகே வீரபாண்டி ஊராட்சிக்குட்பட்ட முத்துத்தேவன்பட்டியில் உள்ள நெடுஞ்சாலை ஓரத்தில் மரக்கன்றுகள் நடம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தேனி ஊராட்சி ஒன்றிய சேர்மன் சக்கரவர்த்தி தலைமை வகித்து 220 மரக்கன்றுகளை நட்டார். இதில் மாநில நெடுஞ்சாலைத் துறை தேனி உதவிகோட்ட பொறியாளர் ராமமூர்த்தி, இளநிலை பொறியாளர் சதீஷ்குமார், மற்றும் சாலை ஆய்வாளர்கள், சாலைப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
* பெரியகுளம் அருகே எண்டப்புளி ஊராட்சிக்கு உட்பட்ட சாலையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியகுளம் எம்எல்ஏ சரவணகுமார் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் பாண்டி, பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தங்கவேல், வடபுதுப்பட்டி கவுன்சிலர் சரவணன் உட்பட திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post மாநில நெடுஞ்சாலைதுறையின் சார்பில் தேனி மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் பணி ‘ஜரூர்’ appeared first on Dinakaran.