தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டுகளுக்கான தேர்வுகள் தேதி அறிவிப்பு

சென்னை: நடைபெறவுள்ள ஜூன்/ஜூலை 2023, தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் முதலாம் ஆண்டு தேர்வுகள் 23.06.2023 முதல் 12.07.2023 வரையிலும் இரண்டாம் ஆண்டு தேர்வுகள் 22.06.2023 முதல் 11.07.2023 வரையிலும் நடைபெறவுள்ளது.

இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் (தட்கலில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் உட்பட) www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக 12.06.2023 பிற்பகல் முதல் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி விவரங்களை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.

பதிவிறக்கம் செய்யும் முறை: தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று முதலில் “HALL TICKET” என்ற வாசகத்தினை ‘Click’ செய்தால் தோன்றும் பக்கத்தில் உள்ள DEE EXAM JUNE/JULY 2023 PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOAD என்பதை ‘Click’ செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்கள் விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியை (Date of Birth) பதிவு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டுகளுக்கான தேர்வுகள் தேதி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: