வந்தவாசி அடுத்த வடவணக்கம்பாடியில் திறந்தவெளி கிணறுகள் அமைக்கும் பணிகளை இணை இயக்குனர் திடீர் ஆய்வு

வந்தவாசி : வந்தவாசியில் திறந்தவெளி கிணறுகள் அமைக்கும் பணிகளை வேளாண்மை இணை இயக்குனர் நேற்று ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் வட்டார வேளாண்மை துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வடவணக்கம்பாடி கிராமத்தில் உள்ள தரிசு நிலத்தொகுப்பு பகுதியில் திறந்த வெளி கிணறுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை நேற்று வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகளுக்கு கடபாரை, மண்வெட்டி, விசைதெளிப்பான் உள்ளிட்ட உபகரண பொருட்களை வழங்கினார். இதனை தொடர்ந்து திரக்கோயில் கிராமத்தில் நெல் இயந்திர நடவு பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது விவாசாயிகளிடம் வேளாண்மை துறை அலுவலர்கள் விவசாயிகளுக்கான இடுப்பொருட்களை வழங்குகிறார்களா? வேளாண்துறை சார்ந்த திட்டங்களை தெரிவிக்கின்றார்களா? என கேட்டறிந்தார்.

இதில் உழவர் பயிற்சி மைய துணை இயக்குனர் ராமநாதன், தெள்ளார் வட்டார உதவி இயக்குனர் தே. குமரன், துணை வேளாண்மை அலுவலர் ரவிக்குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் செந்தில், சங்கர் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

The post வந்தவாசி அடுத்த வடவணக்கம்பாடியில் திறந்தவெளி கிணறுகள் அமைக்கும் பணிகளை இணை இயக்குனர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: