12-ம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட்டை 14-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

சென்னை: 12-ம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட்டை 14-ம் தேதி முதல் தனித் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். தனித்தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பெறலாம். ஜூன் 19-26-ம் தேதி வரை 12-ம் வகுப்பு துணைத்தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

The post 12-ம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட்டை 14-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: