திருச்சி லால்குடி அருகே நந்தியாறு தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

திருச்சி: லால்குடி அருகே புள்ளம்பாடி இருதயபுரம் நந்தியாறு தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். நந்தியாற்றில் 5.9 கி.மீ. தொலைவுக்கு ரூ.1.94 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார். நந்தியாறு ஆற்றின் இருபுறமும் இருந்த 120 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் அகற்றப்பட்டு தூர்வாரப்பட்டது. நந்தியாறு தூர்வாரப்படும் பணிகள் மூலம் 5,775 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

The post திருச்சி லால்குடி அருகே நந்தியாறு தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: