கோவில்பட்டி அருகே தெருவில் குளம் போல் தேங்கி நிற்கும் கழிவுநீர்

*நோய் பரவும் அபாயம்

கோவில்பட்டி : கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி ஊராட்சிக்குட்பட்ட இ.பி.காலனியில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இனாம்மணியாச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதி இ.பி.காலனி. இங்குள்ள 8 தெருக்களில் 500க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.
இதில் 5வது தெருவில் அமைக்கப்பட்டுள்ள வாறுகால் மூலமாக சென்ற கழிவுநீர் அங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்திற்கு சென்று வந்தாக கூறப்படுகிறது.

இதனை கடந்த ஓராண்டு முன்பு தனிநபர் ஒருவர் கழிவுநீர் செல்வதை தடுத்த காரணத்தினால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் 5வது தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கு முன்பும் குட்டை போல் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. இதனால் கடுமையான துர்நாற்றம் வீசி வருவதோடு, காய்ச்சல், வயிற்று போக்கு என பலவிதமான தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கழிவுநீர் தேங்கி நிற்காமல் செல்ல வழிவகை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால், தங்களது வீட்டின் சாவிகளை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வழங்கி விட்டு அங்கு குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

The post கோவில்பட்டி அருகே தெருவில் குளம் போல் தேங்கி நிற்கும் கழிவுநீர் appeared first on Dinakaran.

Related Stories: