விழுப்புரம் அருகே மேல்பாதி தர்மராஜா திரவுபதி அம்மன் கோயில் விவகாரம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மேல்பாதி திரவுபதி அம்மன் கோயில் விவகாரம் தொடர்பாக கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார். விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் முன்னிலையில் இரு தரப்பு மக்களும் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பட்டியலினத்தை சேர்ந்தவர்களை அனுமதிக்கவில்லை என இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு கடந்த 2 மாதங்களாக தீர்வு காணப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் கோயிலுக்கு சீல் வைத்தார். அதனை தொடர்ந்து கடந்த 2 தினங்களாக அக்கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனர்.

இதையடுத்து இன்று கிராமத்தை சேர்ந்த முக்கிய நபர்கள் நேரில் ஆஜராகி எழுத்துபூர்வமாக தங்களின் ஆதாரங்களை அளிக்கலாம் என சம்மன் அளிக்கப்பட்டிருந்தது. சம்மனை பெற்றுக்கொண்ட இருதரப்பினரும் விழுப்புரம் மாவட்டம் வருவாய்த்துறை கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் முன்னிலையில் 62 பேர் ஆஜராகியுள்ளனர். இருதரப்பினரிடையே விசாரணை நடைபெற்று வருகிறது.

The post விழுப்புரம் அருகே மேல்பாதி தர்மராஜா திரவுபதி அம்மன் கோயில் விவகாரம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: