சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லமாக அன்பு சண்டையிட்ட காட்டு யானைகள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இதற்கிடையே இன்று அதிகாலை சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய 2 காட்டு யானைகள் சாலையின் நடுவே செல்லமாக அன்புடன் தனது தும்பிக்கையால் சண்டையிட்டபடி நின்றன.

இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்து சிறிது நேரம் வாகனங்களை நிறுத்தினர். சிறிது நேரம் சாலையில் நடமாடிய காட்டு யானைகள் பின்னர் மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றன. இதைத் தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன.

The post சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லமாக அன்பு சண்டையிட்ட காட்டு யானைகள் appeared first on Dinakaran.

Related Stories: