ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல், காஸ் பாஜ மாநில செயலாளர் தகவல்

திருவண்ணாமலை, ஜூன் 9: பெட்ரோல் டீசல் மற்றும் காஸ் ஆகியவற்றையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர பாஜக விரும்புகிறது என மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தெரிவித்தார். திருவண்ணாமலையில் நேற்றுமுன்தினம் தெற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கடந்த 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் பிரதமர் மோடி எண்ணற்ற திட்டங்களை செய்திருக்கிறார். ₹48.27 கோடி ஜன்தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் விவசாயிகளுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. 2026ம் ஆண்டுக்குள் சுங்கச்சாவடிகள் அனைத்தை யும் அகற்ற நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். வங்கி கணக்குகள் மூலம் நேரடியாக மத்திய அரசு நலத்திட்டங்கள் சென்றடைகிறது. பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் ஆகியவற்றையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் தான் விலையை குறைக்க முடியும். எனவே, அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர ஒன்றிய அரசு விரும்புகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது, மாவட்ட தலைவர் கே.ஆர்.பாலசுப்ரமணியன், பொதுச்செயலாளர் ரமேஷ் முருகன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு அறவாழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல், காஸ் பாஜ மாநில செயலாளர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: