ரோட்டை மறந்த டிரைவர் வாய்ஸ் நோட்டில் சாட்டிங்: அலறிய பயணிகள்

சாலைகளில் வாகனங்களை ஓட்டிச்செல்லும்போது டிரைவர்கள் செல்போன் பேசக்கூடாது என்பது போக்குவரத்து விதி. செல்போன் பேசியபடி வாகனங்களை ஓட்டுவதால் கவனம் சிதறி விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் அரசு பஸ் டிரைவர் ஒருவர் செல்போன் பேசியபடி பஸ்சை ஓட்டிச்சென்று பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளார். வாணியம்பாடியில் இருந்து ஆம்பூருக்கு செல்லும் அரசு டவுன் பஸ்சை ஓட்டிச்சென்ற அந்த டிரைவர், செல்போனில் சாவகாசமாக பேசிக்கொண்டும், வாய்ஸ் நோட் அனுப்பியபடியும், நொறுக்கு தீனிகளை சாப்பிட்டவாறும் சென்று கொண்டிருந்தார். இதை கவனித்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அதில் ஒருவர், டிரைவர் அலட்சியமாக பஸ் ஓட்டிச்செல்வதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள், தினந்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் டிரைவர் அஜாக்கிரதையாக செயல்படலாமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். அதிரடி சஸ்பெண்ட்: வீடியோ வைரலானதை தொடர்ந்து டிரைவர் பிரதீப்குமாரை சஸ்பெண்ட் செய்து அரசு போக்குவரத்து கழக வேலூர் மண்டல பொது மேலாளர் கணபதி உத்தரவிட்டார்.

The post ரோட்டை மறந்த டிரைவர் வாய்ஸ் நோட்டில் சாட்டிங்: அலறிய பயணிகள் appeared first on Dinakaran.

Related Stories: