மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: கார் பருவ சாகுபடிக்காக, மணிமுத்தாறு அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் ஒன்றாம் தேதி, 40 அடி பெருங்கால் பாசன கால்வாய் திறந்து விடப்படும். பெருங்கால் பாசனம் மூலம், சுற்று பகுதியில் உள்ள ஏழு கிராமங்களில் சுமார் 3000 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசன பகுதிகள் இதனால் பயன்பெறும். மணிமுத்தாறு அணையின் மொத்த கொள்ளவு 118 அடி. இத்தனை ஆண்டுகளும், அணையில் 40 அடி தண்ணீர் இருந்தாலே, பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். ஏனெனில் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, விவசாயத்திற்கான மிக முக்கிய நீர் ஆதாரம் மணிமுத்தாறு அணை மட்டும்தான். அணையின் தற்போதைய நீர்மட்டம் 65 அடி அளவில் இருக்கிறது என்று கூறப்படுகிறது. உடனடியாக தமிழக அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுவதில் உள்ள பிரச்னைகளுக்கான தீர்வை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: