அரிசி ஆலை, கட்டுமான பணிகளில் அமர்த்தினால் வெளி மாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதி செய்துதர வேண்டும்: தொழிலக பாதுகாப்பு இயக்குனர் செந்தில்குமார் பேச்சு

சென்னை: சென்னை மண்டலத்தில் இயங்கி வரும் செங்கல் சூளை, அரிசி ஆலை மற்றும் கட்டுமான தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் வெளி மாநில தொழிலாளர்களின் பணி நிலைமைகள் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் கிண்டியில் உள்ள தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் அலுவலக கருத்தரங்கு கூடத்தில் நேற்று நடந்தது. கருத்தரங்கிற்கு, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் செந்தில்குமார் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், ‘‘வெளி மாநில தொழிலாளர்களை பணி அமர்த்தும் போது, அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிவறை வசதி, இருப்பிட வசதி மற்றும் தொழிலாளர் நலன் சார்ந்த விஷயங்களில், சட்டவிதிகளில் கூறப்பட்டுள்ளவாறு ஏற்படுத்தி தர வேண்டும்’’ என்றார்.இந்த கருத்தரங்கில், கூடுதல் இயக்குனர் பிரேமகுமாரி, இணை இயக்குனர்கள் நிறைமதி, கார்த்திகேயன், ஜெயக்குமார்மற்றும் 120 தொழிற்சாலை நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post அரிசி ஆலை, கட்டுமான பணிகளில் அமர்த்தினால் வெளி மாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதி செய்துதர வேண்டும்: தொழிலக பாதுகாப்பு இயக்குனர் செந்தில்குமார் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: