சாலை பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம்

திருவள்ளூர்: அயனம்பாக்கம் பகுதியில் உள்ள டிரான்ஸ்எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற தொழிற்சாலையில் சாலை பாதுகாப்பு மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு திருவள்ளூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் குமார் தலைமை தாங்கினார். இந்த விழிப்புணர்வு முகாமை முன்னிட்டு தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு மாத விழிப்புணர்வு குறித்த பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற தொழிலாளர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

விழாவில் திருவள்ளூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் குமார் பரிசுகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து தொழிற்சாலை பாதுகாப்பில் தொழிலாளர்களின் முக்கியத்துவம் குறித்தும், தொழிற்சாலையில் விபத்தில்லா சுழலை உறுவாக்குவது குறித்தும், 52வது தேசிய பாதுகாப்பு மாதத்தின் கருப்பொருளான ‘நமது இலக்கு ஆபத்தில்லா சூழலை உருவாக்குவது’ குறித்தும், பணியிடத்தில் பாதுகாப்பு குறித்தும் தொழிலாளர்களிடம் எடுத்துரைத்தார்.

இதில் திருவள்ளூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் திவ்யா பணியிட பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் இயந்திரங்களை பாதுகாப்பாக கையாளும் முறை குறித்து விளக்கி பேசினார். மேலும் தொழிற்சாலையின் துணைத் தலைவர் (உறவுகள்) கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் (இயக்கம்) கண்ணன், தேசிய பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ஸ்ரீனிவாசன், மனிதவள அலுவலர்கள் நாகராஜ், பாலமுருகன், உமாபதி, பாதுகாப்பு அலுவலர்கள் ஜீவா, சங்கர், பரசுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post சாலை பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: