ஆணையர் பணியிடத்தை மாற்றி மீண்டும் பள்ளிக்கல்வி இயக்குநர் பணி: பள்ளி துணை ஆய்வாளர் சங்கம் முதல்வருக்கு நன்றி

காஞ்சிபுரம்: பள்ளி கல்வி ஆணையர் பணியிடத்தை மாற்றில் மீண்டும் பள்ளிக்கல்வி இயக்குநர் பணியை கொண்டு வந்த தமிழ்நாடு முதல்வருக்கு பள்ளி துணை ஆய்வாளர் சங்கம் நன்றியை தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு பள்ளி துணை ஆய்வாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் கிருபாகரன் வெயிட்டுள்ள அறிக்கையில் குறியிருப்பதாவது: கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடம் மாற்றப்பட்டு ஆணையர் பணியிடம் கொண்டு வந்தது. இதற்கு, தமிழ்நாடு பள்ளித்துணை ஆய்வாளர் சங்கம் சார்பில், பணியிடத்தை ரத்து செய்தது தவறு என்றும், இயக்குநர் பணியிடத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட அலுவலர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

நம்முடைய நீண்டநாள் போராட்டத்திற்கு வெற்றி கிட்டும் வகையில், வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளிக்கல்வி இயக்குனர் பணியிடம் மீண்டும் கொண்டுவரப்பட்டது. இதற்கு காரணமாக இருந்த தமிழ்நாடு முதல்வருக்கும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழிக்கும், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பள்ளித்துணை ஆய்வாளர் சங்கத்தின் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். வரலாற்று சிறப்புமிக்க பள்ளிக்கல்வி இயக்குனர் பணியிடத்தில் நியமிக்கப்பட்டுள்ள இயக்குனர் அறிவொளிக்கும், அவர் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஆணையர் பணியிடத்தை மாற்றி மீண்டும் பள்ளிக்கல்வி இயக்குநர் பணி: பள்ளி துணை ஆய்வாளர் சங்கம் முதல்வருக்கு நன்றி appeared first on Dinakaran.

Related Stories: