குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிப்பதில் விவசாயிகளை ஒன்றிய அரசு வஞ்சித்து விட்டது: முத்தரசன் குற்றச்சாட்டு

சென்னை: விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிப்பதில் ஒன்றிய அரசு விவசாயிகளை வஞ்சித்துள்ளது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடப்பாண்டு கரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு விலைகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த தொகை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் மோடியும், பாஜவும் ஆட்சியில் அமர்ந்தால் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவோம். ஓராண்டு காலம் நடந்த விவசாயிகள் போராட்டத்தால் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய சட்டபூர்வ நடைமுறைகள் உருவாக்கப்படும் என கொடுத்த உறுதி மொழியும் நிறைவேற்றப்படவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் சில வகை உரங்களுக்கும், பூச்சி மருந்துகளுக்கும் மானியங்களை முற்றிலுமாக நீக்கிவிட்டது. கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கையால் அதானி, அம்பானி குழுமங்கள் லாபம் பெற மோடியின் ஒன்றிய அரசு ஆதரவு காட்டியுள்ளது. விவசாயிகளின் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிப்பதில் மோடியின் ஒன்றிய அரசு விவசாயிகளை வஞ்சித்துள்ளது.

The post குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிப்பதில் விவசாயிகளை ஒன்றிய அரசு வஞ்சித்து விட்டது: முத்தரசன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: