தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு ராம்கோ நிறுவனம் சார்பில் ரூ.4 கோடி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது

சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு ராம்கோ நிறுவனம் சார்பில் ரூ.4 கோடி மற்றும் பொன் கெமிக்கல்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.25 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் விளையாட்டுக்கான கட்டமைப்பை மேம்படுத்தி சர்வதேச அளவிலான விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை உருவாக்கும் வகையிலும், தேவையான உதவிகளை வழங்கிடும் வகையிலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் “தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை” உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில் அரசு ஆணை எண்.29 இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை நாள் 05.05.2023 -ன் படி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரை தலைவராகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களை துணைத்தலைவராகவும் கொண்ட ஏழு பேர் அடங்கிய நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏழு பேர் அடங்கிய நிர்வாகக் குழு தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் இந்த அறக்கட்டளைக்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் இன்று (08.06.2023) சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் “தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு இராம்கோ நிறுவனம் சார்பில் பங்களிப்பாக ரூபாய் 4 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும் பொன் கெமிக்கல்ஸ் நிறுவனம் (Pon Pure Chemicals Group) சார்பில் ரூபாய் 25 லட்சத்திற்கான காசோலை அமைச்சரிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, ராம்கோ மற்றும் பொன் கெமிக்கல்ஸ் நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு ராம்கோ நிறுவனம் சார்பில் ரூ.4 கோடி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: