திருப்பூரில் துணிகளுக்கு சாயம் ஏற்றும் அலையில் இருந்து நச்சுவாயு வெளியேறியதால் எழுந்த புகார்: அலைக்கு தற்காலிகமாக தடை விதிப்பு!

திருப்பூர்: திருப்பூரில் துணிகளுக்கு சாயம் ஏற்றும் அலையில் இருந்து நச்சுவாயு வெளியேறியதால் எழுந்த புகாரை தொடர்ந்து அலை செயல்பட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. வெங்கமேடு பகுதியில் இயங்கும் அந்த அலையில் இருந்து வெளியேறிய நச்சுவாயுவால் குழந்தைகள், பெரியவர்கள் என பலர் வாந்தி மாயம் உள்ளிட்ட உடல் உபரிகளுக்கு ஆளானதாக புகார் எழுந்துள்ளது. சாயம் கழிவுநீரை சுத்திகரிக்காமல் வைத்ததால் அதில் இருந்து நச்சுவாவு வெளியேறியதால் கூறப்பட்ட நிலையில், மாநகரட்ச்சி சுகாதார அலுவலர்கள் மருத்துவ பரிசோதனைக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

உடல் உபரிகளுக்கு ஆளான பலருக்கு, உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தகவல் அறிந்து சென்ற மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், மாநகர ஆணையர் பவன் குமார், உள்ளிட்டோர் சம்மந்தப்பட்ட சாயம் அலையில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். இப்பகுதி மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக பவன் குமார் கூறியுள்ளார்.

இந்த அலையில் மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மாசு கட்டுப்பாடு அலுவலர்களின் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். நச்சுவாயு வெளியேற்றம் கழிவு நீரின் சோதனை முடிவுகள் வரும் வரை தற்காலிகமாக அலை செயல்பட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

The post திருப்பூரில் துணிகளுக்கு சாயம் ஏற்றும் அலையில் இருந்து நச்சுவாயு வெளியேறியதால் எழுந்த புகார்: அலைக்கு தற்காலிகமாக தடை விதிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: