தங்கம் விலையில் அதிரடி மாற்றம்: பவுனுக்கு ரூ.320 குறைந்தது

சென்னை: தங்கம் விலை இன்று காலையில் பவுனுக்கு ரூ.320 குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து கடந்த மார்ச் 5ம் தேதி ஒரு பவுன் ரூ.46,200 என்ற புதிய உச்சத்தை தொட்டது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த 5ம் தேதி ஒரு பவுன் ரூ.44,560க்கு விற்கப்பட்டது. 6ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5600க்கும், பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு பவுன் ரூ.44,800க்கு விற்கப்பட்டது.

7ம் தேதி கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5605க்கும், பவுனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு பவுன் ரூ.44,840க்கு விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 உயர்ந்தது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தி வந்தது. இந்த நிலையில் இன்று காலையில் தங்கம் விலை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.5,565க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.44,520க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

The post தங்கம் விலையில் அதிரடி மாற்றம்: பவுனுக்கு ரூ.320 குறைந்தது appeared first on Dinakaran.

Related Stories: