கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க தொடரும் எதிர்ப்பு: 2வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து 2 வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பெருந்துறை அருகே மூலக்கரையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பொதுமக்களுக்கு ஆதரவாக கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்கள் சீரமைக்கும் திட்டத்தின் கீழ் பழைய கட்டுமானங்களை மட்டுமே புதுப்பிக்க வேண்டும்.

புதிய கான்கிரீட் கட்டுமானங்களை அமைக்க கூடாது எனவும் தொடர்ந்து 2வது நாளாக உண்ணா விரத போராட்டம் மூலமாக வலியுறுத்தி வருகின்றனர். கீழ்பவானி கால்வாய் சீரமைப்புக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 710 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதனை செயல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து கால்வாயை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. அனல் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க ஒரு பிரிவு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

The post கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க தொடரும் எதிர்ப்பு: 2வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் appeared first on Dinakaran.

Related Stories: