மிரட்டும் பிபோர்ஜாய் புயல்.. அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை : இந்திய வானிலை ஆய்வு மையம்!!

திருவனந்தபுரம்: அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது..ஆண்டுதோறும் ஜூன் 1 ம் தேதி கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு அரபிக் கடலில் உருவான பிபோர்ஜாய் புயல் காரணமாக பருவமழை தொடங்குவது தாமதமாகியுள்ளது. தற்போது இந்த புயல் கராச்சிக்கு தெற்கு ஓமனை நோக்கி நகர்ந்துவிட்டதால் லட்சத்தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன.

மாலத்தீவு, லட்சத்தீவு முதல் கேரளா கடற்கரை வரை நிலையான மேகமூட்டம் நிலவுகிறது. இதையடுத்து அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலம்புழா, கொல்லம்,பத்தினம்திட்டா, திருவனந்தபுரம் மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியைச் சேர்ந்த தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களான கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் விரைவில் மழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கடலோர ஆந்திராவில் 5 நாட்களுக்கு வெப்ப அலை தாக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது இதனிடையே தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள பிபோர்ஜோய் புயல் மிக தீவிரப்புயலாக வலுவடைந்தது. இது மேலும் தீவிரமடைந்து அடுத்து மூன்று நாட்களில் வடக்கு நோக்கி நகரும் என்று சொல்லப்படுகிறது. இதனால் கேரளா முதல் மகாராஷ்டிரா வரை உள்ள மேற்கு கடற்கரை பகுதிகளில் மழை தீவிரமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மிரட்டும் பிபோர்ஜாய் புயல்.. அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை : இந்திய வானிலை ஆய்வு மையம்!! appeared first on Dinakaran.

Related Stories: