கோயிலுக்குள் பட்டியலின இளைஞருக்கு அனுமதி மறுப்பு: குளித்தலை அருகே கோயிலை தற்காலிகமாக மூடிய அதிகாரிகள்

கரூர்: குளித்தலை அருகே காளியம்மன் கோயில் திருவிழாவில் பட்டியலின சமூக இளைஞரை கோயிலுக்குள் அனுமதிக்காததால் கோயிலை அதிகாரிகள் தற்காலிகமாக பூட்டினர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வீரணம்பட்டியில் காளியம்மன் கோயில் திருவிழாவில் பட்டியலின சமூக இளைஞரை கோயிலுக்குள் அனுமதிக்காததால் பிரச்னை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து கோயிலை அதிகாரிகள் தாற்காலிகமாக இழுத்து பூட்டினர். இப்பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்த்து கொள்ளலாம் எனவும் அதுவரை கோயிலை தற்காலிகமாக பூட்டுவதாகவும் கூறி அதிகாரிகள் பூட்டு போட்டனர். அப்போது குறிப்பிட சமூகத்தினர் கோயிலை பூட்ட கூடாது என்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதேபோல தங்களை கோயிலுக்குள் அனுமதிக்க கோரி பட்டியலின மக்களும் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

The post கோயிலுக்குள் பட்டியலின இளைஞருக்கு அனுமதி மறுப்பு: குளித்தலை அருகே கோயிலை தற்காலிகமாக மூடிய அதிகாரிகள் appeared first on Dinakaran.

Related Stories: