இந்நிலையில், ஊட்டி-குன்னூர் -மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் நீலகிரி மலை ரயில் மேம்பாட்டுக்காக ரயில்வே அமைச்சகம் உத்தரவின் பேரில் ரயில் வாரியம் நிதி ஒதுக்கி பர்னஸ் ஆயில் மற்றும் டீசல் என இரு புதிய இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டன. 28 ரயில் பெட்டிகள் கடந்த ஓராண்டிற்கு முன்பு தயாரிக்கப்பட்டன. இவற்றில் மலை ரயில் இன்ஜின்கள் சோதனை ஓட்டம் நிறைவடைந்தது. ரயில் பெட்டிகளுக்கான வெள்ளோட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை பல்சக்கரத்தில் இயங்கும் மலை ரயிலுக்கான 4 புதிய பெட்டிகளின் சோதனை ஓட்டம் கடந்த இரு நாட்களாக நடைபெற்றது.
எடைக்கு ஏற்றவாறு பல்சக்கரத்தில் பெட்டிகள் இயங்கும் விதம் குறித்து இன்ஜினியர்கள் ஆய்வு செய்தனர். விரைவில் இந்த பெட்டிகள் குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
The post மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே புதிய பெட்டிகளுடன் மலை ரயில் சோதனை ஓட்டம் appeared first on Dinakaran.