திருச்செந்தூர் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.3.10 கோடி வசூல்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் எண்ணும் பணி கோயில் வளாகத்தில் உள்ள காவடி மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது. சிவகாசி பதினெண்சித்தர் மடம் பீடம் குருகுலம் வேதபாடசாலை உழவாரப் பணிக்குழுவினர், மக்கள் பிரதிநிதிகள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், ரூ.3 கோடியே 10 லட்சத்து 40 ஆயிரத்து 748, தங்கம் 2 கிலோ 800 கிராம், வெள்ளி 25 கிலோ, பித்தளை 33 கிலோ, 292 வெளிநாட்டு பணம் வசூலாகி இருந்தது.

The post திருச்செந்தூர் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.3.10 கோடி வசூல் appeared first on Dinakaran.

Related Stories: