திருமண விழாவில் நண்பர்கள் அசத்தல் மணமகனுக்கு ஆட்டுக்கிடா சண்டை சேவல், நாய் பரிசு

காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி நரிக்குடி கிராமத்தை சேர்ந்த சிவா- துர்கா திருமணம் நேற்று நடைபெற்றது. அப்போது சிவாவின் நண்பர்கள் இணைந்து 2 சண்டை கிடாய்கள், 5 சண்டை சேவல்கள், நாட்டு ரக இனத்தை சார்ந்த கன்னி, சிப்பிப்பாறை நாய் ஆகியவற்றை பரிசாக வழங்கி அசத்தினர். திருமணத்தில் அலங்கார பொருட்களை பரிசாக வழங்கும் நண்பர்களுக்கு மத்தியில், பாரம்பரிய கிடா, சேவல், நாய் இனங்களை பாதுகாக்கும் வகையில், அவற்றை பரிசாக வழங்கியது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

The post திருமண விழாவில் நண்பர்கள் அசத்தல் மணமகனுக்கு ஆட்டுக்கிடா சண்டை சேவல், நாய் பரிசு appeared first on Dinakaran.

Related Stories: