தூத்துக்குடி ஸ்டெர்லைட் கழிவுகளை அகற்ற குழுவினர் ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பல்வேறு போராட்டத்துக்கு பிறகு மூடப்பட்டது. இந்த நிலையில் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை ஏற்று அனுமதி வழங்கியது. ஆலையில் மீதம் உள்ள ஜிப்சத்தை அகற்றுவது தொடர்பாகவும், பசுமையை பராமரிப்பதற்காகவும் உதவி கலெக்டர் கவுரவ் குமார் தலைமையில் 9 பேர் கொண்ட உள்ளூர் மேலாண்மை குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் நேற்று பகல் 11.50 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு சென்று மதியம் 1.30 மணி வரை ஆய்வு செய்தனர். அதன்பிறகு குழுவினர் ஆலையில் இருந்து புறப்பட்டு சென்றனர். ஆலைக்கு வரும், வௌியேறும் வாகனங்கள், பணியாளர்களை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

The post தூத்துக்குடி ஸ்டெர்லைட் கழிவுகளை அகற்ற குழுவினர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: