சத்தியமங்கலம் அருகே தமிழக- கர்நாடக மலைப்பாதையில் தலைகீழாக கவிழ்ந்த லாரி: டிரைவர் உயிர் தப்பினார்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே ஆசனூர் மலைப்பகுதியில் லாரி தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார். கரூரிலிருந்து லாரி ஒன்று ஈரோடு மாவட்டம் ஆசனூர் வழியாக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் செல்வதற்காக சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தது. லாரியை பழைய ஆசனூர் கிராமத்தை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (33) என்பவர் ஓட்டிச் சென்றார். ஆசனூர் அருகே அரேப்பாளையம் பிரிவு வனப்பகுதியில் பகுதியில் லாரி சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் லாரி தலைகீழாக கவிழ்ந்தது.

இதில் லேசான காயத்துடன் டிரைவர் ஜெகதீஸ்வரன் உயிர் தப்பினார். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஜெகதீஸ்வரனை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த ஆசனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post சத்தியமங்கலம் அருகே தமிழக- கர்நாடக மலைப்பாதையில் தலைகீழாக கவிழ்ந்த லாரி: டிரைவர் உயிர் தப்பினார் appeared first on Dinakaran.

Related Stories: