கிண்டி பகுதியில் 8 மின் திருட்டுகளை கண்டுபிடித்தது தமிழ்நாடு மின்சார வாரியம்: அபராதமாக ரூ.8.64 லட்சம் வசூல்

சென்னை: 17.05.2023 அன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டத்தின் மையம், வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் செங்கல்பட்டு அமலாக்க அதிகாரிகள் சென்னை தெற்கு-I மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட கிண்டி பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது 8 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் ரூ.8,31,123 இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகை ரூ.33,000 செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. மொத்தமாக இழப்பீட்டுத் தொகையாக ரூ.8.64 இலட்சம் வசூல் செய்யப்பட்டது. மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை செயற்பொறியாளர் அமலாக்கம் சென்னை, கைபேசி 9445857591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

The post கிண்டி பகுதியில் 8 மின் திருட்டுகளை கண்டுபிடித்தது தமிழ்நாடு மின்சார வாரியம்: அபராதமாக ரூ.8.64 லட்சம் வசூல் appeared first on Dinakaran.

Related Stories: