சென்னையில் எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சத்திய என்ற சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை

சென்னை: சென்னையில் எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதியா என்ற சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவில் வைக்கப்பட்டிருந்த தென்னை மரத்துண்டை, அவ்வழியே சென்ற ரயில் எஞ்சின் ஓட்டுநர் கண்டுபிடித்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். தண்டவாளத்தில் இருந்து மரத்துண்டை அகற்றிய ஓட்டுநர் அதை ஆவடி ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ரயில்வே டி.எஸ்.பி. முத்துக்குமார் சம்பவ இடத்தில ஆய்வு மேற்கொண்டார்.

ஆவடி அடுத்த திருநின்றவூர் எக்ஸ்பிரஸ் ரயில் பாதியில் தென்னை மர துண்டு வைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ரயில்வே டி.எஸ்.பி. முத்துக்குமார் சம்பவ இடத்தில ஆய்வு மேற்கொண்டு வருகின்றர் திருநின்றவூர் நேரு நகர் செந்தில் என்பவரின் வீட்டில் தென்னை மரத்தை வெட்டி ரயில் தண்டவாளத்தில் வீசியுள்ளார்.

இதை நோட்டமிட்ட சில மர்ம நபர்கள் அந்த மரத்துண்டுகளை எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் வைத்து சென்றுருக்கிறார்கள், இந்த நிலையில் நள்ளிரவில் அவ்வழியே வந்த ரயில் எஞ்சின் சிக்கிருக்கிறது, இதை கண்டா எஞ்சின் ஓட்டுநர் அதை உடனடியாக அப்புறப்படுத்தி எடுத்துக்கொண்டு ஆவடி ரயில் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த சமத்துவம் குறித்து தமிழக ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி. முத்துக்குமார் சம்பவ இடத்தில ஆய்வு மேற்கொண்டுள்ளார். ரயிலை கவிழ்க்க சதி என்ற கோணத்தில் சந்தேகத்தின் பெயரில் அதே பகுதியை சேர்ந்த சில நபர்களை பிடித்து ரயில் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post சென்னையில் எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சத்திய என்ற சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: