அம்பத்தூர் ஆவின் நிறுவனத்தில் எந்த சிறார்களும் பணியில் அமர்த்தப்படவில்லை: அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்

சென்னை: அம்பத்தூர் ஆவின் நிறுவனத்தில் எந்த சிறார்களும் பணியில் அமர்த்தப்படவில்லை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், ஆவின் நிறுவனத்தில் சிறார்கள் பணியமர்த்தப்பட்டதாக உண்மைக்கு புறம்பான தகவலை வெளியிட்டுள்ளனர். உண்மைத்தன்மையை அறிந்து தகவலை வெளியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். வேலூர் ஆவினில் ஒரே பதிவெண் கொண்ட இரு வாகனங்களை பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். எந்தத் தவறுகளையும் செய்வதற்கு ஆவின் நிர்வாகம் ஒருபோதும் அனுமதிக்காது. ஆவின் நிறுவனத்துக்கு எதிராக சித்தரிப்பது போன்று தகவலை வெளியிடுவது வருந்தத்தக்கதாகும் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

The post அம்பத்தூர் ஆவின் நிறுவனத்தில் எந்த சிறார்களும் பணியில் அமர்த்தப்படவில்லை: அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: