கொடைக்கானலில் சகோதரர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை..!!

கொடைக்கானல்: கொடைக்கானலில் சகோதரர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் விரக்தியடைந்த பயாஸ் ராஜா என்பவர் தீ குளித்து தற்கொலை செய்துகொண்டார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கவி தியாகராஜர் சாலையில் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சகோதரர்களான ஷபீர் ராஜா மற்றும் பயாஸ் ராஜா ஆகியோர் கைவினைப் பொருட்கள் கடை வைத்து நடத்தி வருகின்றனர்.

அதில் மேல் தளத்தில் பயாஸ் ராஜாவும் கீழ்த்தனத்தில் ஷபீர் ராஜாவும் கடை வைத்துள்ளனர். இருவரின் கடைகளுக்கு செல்லும் நடைபாதையில் தடுப்பு அமைத்தது தொடர்பாக பயாஸ் ராஜாவுக்கும் சபீர் ராஜாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நடைபாதைக்காக சாலையில் இருந்து கடைக்கு செல்வதற்கு பயாஸ் ராஜா இரும்பு நடைபாதை அமைந்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஷபீர் ராஜா அதனை அகற்றியது மட்டுமல்லாமல் தான் கேனில் வைத்திருந்த பெட்ரோல் தன் உடல் மீது ஊற்றி தீ வைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கடைக்காரர்கள் தீயை அனைத்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

தற்போது அவர் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கொடைக்கானலில் சகோதரர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை..!! appeared first on Dinakaran.

Related Stories: